முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னை அடையாறு பாலத்தில் அடுத்தடுத்து எரிந்த 5 வாகனங்கள்.!

சென்னை அடையாறு பாலத்தில் அடுத்தடுத்து எரிந்த 5 வாகனங்கள்.!

காட்சிப் படம்

காட்சிப் படம்

சென்னை அடையாறு திருவிக பாலத்தின் கீழ் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றில் புகை கிளம்பி திடீரென தீப்பற்றி எரிந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

அடையாறில் சென்று கொண்டிருந்த காரில் தீப்பிடித்து அடுத்தடுத்து 5 வாகனங்களில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், கார் ஒன்றும் 5 இருசக்கர வாகனமும்  எரிந்து நாசமடைந்தன.

சென்னை அடையாறு திருவிக பாலத்தின் கீழ் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றில் புகை கிளம்பி திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காரிலிருந்து தீயானது பரவி பாலத்தின் கீழ் நிறுத்தி வைத்திருந்த ஐந்து இருசக்கர வாகனங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் ஒரு கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக எரிந்து நாசமானது.

உடனே அருகிலிருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் மயிலாப்பூர் மற்றும் அடையார் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். காரில் இருந்த ஓட்டுனர் இறங்கி ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

காரில் தீவிபத்து ஏற்பட்டது எப்படி? வாகன உரிமையாளர் யார்? என்பது தொடர்பாக சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Fire accident