முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிடிஆர் திடீர் சந்திப்பு... ஆடியோ விவகாரம் காரணமா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிடிஆர் திடீர் சந்திப்பு... ஆடியோ விவகாரம் காரணமா?

மாதிரி படம்

மாதிரி படம்

PTR Meet CM MK Stalin | தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவிருக்கும் நிலையில் இன்று சந்திப்பு நடந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஓர் ஆடியோ இரு வாரங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வெளியானது. எனினும், அது போலியானது என நிதி அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், மற்றொரு ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதுகுறித்து டிவிட்டரில் விளக்கம் அளித்த பழனிவேல் தியாகராஜன், ஆடியோவில் உள்ளது போன்று தாம் யாரிடமும் பேசவில்லை என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் எண்ணமில்லை - வைகோ திட்டவட்டம்

top videos

    மேலும் பல பிரபலங்கள் பேசாததை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார். இச்சூழ்நிலையில், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில், அவரை திடீரென சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடமே இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவிருக்கும் நிலையில் நிதி அமைச்சரை, முதலமைச்சர் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    First published:

    Tags: CM MK Stalin, Minister Palanivel Thiagarajan, TN Cabinet