முகப்பு /செய்தி /தமிழ்நாடு / புனித ரமலான் நோன்பு இன்று தொடக்கம்..! இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

புனித ரமலான் நோன்பு இன்று தொடக்கம்..! இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

ரமலான் நோம்பு தொடக்கம்

ரமலான் நோம்பு தொடக்கம்

ரமலான் நோன்பின்போது ‘சஹர்’ எனப்படும் காலை உணவை 4 மணிக்கே சாப்பிட்டு, சூரியன் உதயத்துக்குப் பின் நோன்பு இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமல் சூரியன் மறைந்த பிறகு நோன்பை முடித்துக் கொள்வார்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரமலான் பிறை தெரிந்ததை தொடர்ந்து தராவிஹா என்னும் சிறப்பு தொழுகையுடன் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை தொடங்கினர்.

இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைப்பிடிப்பதும் ஒன்றாகும். ஷபான் மாதத்தின் 30-ம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாகக் கொண்டு ரமலான் நோன்பு தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்தார்.

ரமலான் நோன்பின்போது ‘சஹர்’ எனப்படும் காலை உணவை 4 மணிக்கே சாப்பிட்டு, சூரியன் உதயத்துக்குப் பின் நோன்பு இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமல் சூரியன் மறைந்த பிறகு நோன்பை முடித்துக் கொள்வார்கள். நோன்பு நடைபெறும் 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சி வழங்கப்படும்.

புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை, திருமயம், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை தொழுகையுடன் தொடங்கினர். தஞ்சாவூர் சாந்தி நகரில் உள்ள பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு நோன்பு திறந்தனர்.

First published:

Tags: Festival, Muslim, Ramadan Fasting, Ramzan