தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றங்களில் முதலில், வங்கியில் இருந்து பேசுவதைப் போல டெபிட் கார்டு எண்களைப் பெற்று வங்கிக் கணக்கில் பணம் திருடும் மோசடிகள் நடைபெற்று வந்தன.
அடுத்து இன்னும் நூதனமாக, வங்கிக்கணக்கு Block செய்யப்படும் என்றோ, மின் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றோ குறுஞ்செய்திகள் அனுப்பி, அதிலுள்ள இணையதள லிங்கை கிளிக் செய்தால் பணம் பறிபோகும் வகையிலான மோசடிகள் அரங்கேறின. தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று, அமேசான் போன்ற நிறுவனங்களில் இருந்து கிஃப்ட் கூப்பன் வந்திருப்பதாகக் கூறி சில கும்பல்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இந்த சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வின்றி இருந்தாலோ, கவனக்குறைவுடன் இருந்தாலோ நமது பணம் பறிபோகும் சூழல் நிலவி வருகிறது. இத்தகைய நூதன குற்றங்களைத் தடுக்க காவல்துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.'
இந்த நிலையில், வடமாநிலங்களில் இருந்து போலி சிம் கார்டுகள் வாங்கப்பட்டு, தமிழ்நாட்டை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆண்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன.
இதே போன்று, பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தியும் சிம் கார்டுகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் போலி சிம்கார்டுகள் வாங்கப்பட்டு நிதி மோசடி நடைபெற்றுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற பிரபல நிறுவனங்களின் பெயரில் நிதி மோசடிகள் அரங்கேறியுள்ளன.
இதையும் படிக்க : மனைவிக்கு பாலியல் தொல்லை.. தம்பியை ஆள்வைத்துக் கொன்ற அண்ணன்... அம்பலமான நாடகம்..!
இத்தகைய போலி சிம் கார்டுகளை முடக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார், கடந்த 2 மாதங்களில் மட்டும் 22,000க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyber crime, Cyber fraud, Tamil Nadu, Tamil News