முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிகரிக்கும் கொரோனா.... அரசு மருத்துவமனைகளில் நடைமுறைக்கு வந்த கட்டாய முகக்கவசம்

அதிகரிக்கும் கொரோனா.... அரசு மருத்துவமனைகளில் நடைமுறைக்கு வந்த கட்டாய முகக்கவசம்

மாஸ்க் கட்டாயம்

மாஸ்க் கட்டாயம்

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள், ஊழியர்கள், உள்ளிட்ட அனைவரும் முக்கவசம் அணிந்து பணியாற்றினர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முகக்கவசம் அணிந்து மருத்துவர்கள், ஊழியர்கள் பணியாற்றினர். நோயாளிகளுக்கும், அவர்களை பார்க்க வருவோருக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 4 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் ஒருவருக்கு மட்டும் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில் உள்ளதாகவும் டீன் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் ஒருநாள் தொற்று பாதிப்பு 10-ஐ கடந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள், உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் என அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டது.

சேலம் அரசு மருத்துவமனையில் முகக்கவசம் அணிந்து வருவோர்களுக்கு மட்டுமே அனுமதி என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்கள், அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து வரத் தொடங்கி உள்ளனர்.

நாகையிலுள்ள தனியார் மருந்து கடைகளிலும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென கடை உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையிலும் முகக்கவசம் கட்டாயம் என்ற விதிமுறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

First published:

Tags: Covid-19, Face mask