முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "டிடிவி தினகரனின் சொத்துகளை எல்லாம் கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

"டிடிவி தினகரனின் சொத்துகளை எல்லாம் கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

EPS Speak About TTV Dhinakaran | டி.டி.வி தினகரனின் ஊழல் பட்டியலை வெளியிட்டால் சரியாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி பேட்டி

  • Last Updated :
  • Salem, India

டி.டி.வி தினகரனின் லண்டனில் இருக்கின்ற சொத்துக்களை எல்லாம் கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , கர்நாடக மாநில தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்றைய அதிமுக செயற்குழு கூட்டத்தில்

மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என கூறினார்.

மேலும் ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு ஓ.பி.எஸ் விரக்தியின் விளம்பிற்குப் போய் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் அவரது பேச்சிற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார். முதலில் தர்மயுத்தம் என்றார். இப்போது மீண்டும் மற்றொரு தர்மயுத்தம் என்கிறார். அவரது தர்ம யுத்தம் எல்லாம் என்ன ஆனது என்று அவரைச் சுற்றி உள்ளவர்களுக்குத் தெரியும். தொண்டர்களுக்கும் தெரியும் என விமர்சித்தார்.

top videos

    அடுத்ததாக அ.தி.மு.க.,வினரின் சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியிருப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, முதலில் டி.டி.வி தினகரனின் ஊழல் பட்டியலை வெளியிட்டால் சரியாக இருக்கும். லண்டன் வரை சொத்து குவித்துள்ளார் என்று திமுக அன்றைய தினமே பல்வேறு செய்திகளை வெளியிட்டது. எனவே அவருக்குச் சொந்தமாக லண்டனில் இருக்கின்ற சொத்துக்களை எல்லாம் கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    First published:

    Tags: EPS, Salem, TTV Dhinakaran