முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மணிப்பூர் கலவரத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்... ஈபிஎஸ் வலியுறுத்தல்

மணிப்பூர் கலவரத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்... ஈபிஎஸ் வலியுறுத்தல்

மாதிரி படம்

மாதிரி படம்

Manipur Riots | தமிழர்கள் படும் அல்லலைப் போக்குவதற்கும் அவர்களை மீட்பதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதது ஏன் என எடப்பாடி பழனிசாமி கேள்வி.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூர் மாநிலம் மோரே பகுதியில் உள்ள தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என தகவல் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் படும் அல்லலைப் போக்குவதற்கும் அவர்களை மீட்பதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: மாணவியின் உள்ளாடையை கழட்டச் சொல்வதா? நீட் தேர்வு கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை வேண்டும் - சீமான் ஆவேசம்

அவதியுறும் தமிழர்கள் குறித்த தகவல்கள் முதலமைச்சருக்கு தெரிவிக்கப்படவில்லையா என வினவியுள்ள ஈபிஎஸ், கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களைக் காக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: EPS