தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. புதிய மின் கட்டணத்தின்படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படும் சூழல் ஏற்பட்டது.
இந்தநிலையில், மின்வாரியத்திற்கு 1,65,000 கோடி ரூபாய் கடன் இருந்து வருகிறது. இதனை கட்டுக்குள் வைக்க வேண்டுமென்றால் அடுத்த ஐந்து ஆண்டிற்கு வருடத்திற்கு ஆறு சதவீதம் அல்லது ஐந்து ஆண்டுகளில் 30 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை வாரியம் அறிவுறுத்தி இருந்தது. அதற்கான ஒப்புதலையும் வழங்கியது.
அதன்தொடர்ச்சியாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள அனுமதியின் பேரில், அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை 4.7 சதவிகிதம் வரை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
மின் கட்டண உயர்வு நுகர்வோரை கடுமையாக பாதிக்கும் என்பதால், இந்த முடிவை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக சென்னையில் மின் வாரிய அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி நேற்று தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
மேலும் படிக்க... போலி துப்பாக்கியை காட்டி லாரி டிரைவரை மிரட்டிய 2 இளைஞர்கள் கைது... திருப்பூரில் பரபரப்பு
ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு நடப்பாண்டு ஜூலை மாதம் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தில் மாற்றம் இருக்கலாம் என அதிகாரிகள் கூறினர். இருந்த போதிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து வெளியாகும் என கூறினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electricity, Electricity bill, Tamil Nadu, Tamil News