முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுகவுக்கு நெருக்கடி தரும் இபிஎஸ்... பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்கத் திட்டம்

திமுகவுக்கு நெருக்கடி தரும் இபிஎஸ்... பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்கத் திட்டம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கள்ளச்சாரயம் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளிக்கவுள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

திமுக அரசின் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 22ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.

இந்நிலையில், அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.எனவே, திமுக அரசின் முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மே 22ஆம் தேதி காலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா காங்கிரஸின் இரு துருவங்கள்... சித்தராமையா, டி.கே.சிவக்குமாரின் பலம், பலவீனங்கள் என்ன?

top videos

    சின்னமலையில் தொடங்கும் பேரணியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளதாகவும்,பேரணியின் முடிவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Edappadi Palaniswami