முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக பொதுச் செயலாளராக தேர்வான ஈபிஎஸ்-க்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு!

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வான ஈபிஎஸ்-க்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு!

ஈபிஎஸ்-க்கு உற்சாக வரவேற்பு

ஈபிஎஸ்-க்கு உற்சாக வரவேற்பு

EPS Visit Salem | அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை

  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் சொந்த ஊரான சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கவும் எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக கடந்த செவ்வாய்க்கிழமை எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, சொந்த மாவட்டமான சேலத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் சாலை நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக மாவட்ட நிர்வாகிகள் சார்பில் கிண்டியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் திரண்டிருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர் மீது மலர் தூவியும், பூங்கொத்து கொடுத்தும், முளைப்பாரி எடுத்தும் வரவேற்றனர்.

தொடர்ந்து, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க, பெண்கள் நீண்ட வரிசையில் நின்று பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் திரண்டிருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் அங்கு உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக-வை அழிக்க சூழ்ச்சிகள் நடப்பதாகவும், தன் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளதாகவும் கூறிய அவர், எதிர்காலத்தில் திமுகவை வீழ்த்துகின்ற பணியை தொண்டர்கள் தன்னிடம் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.பின்னர், சேலம் தலைவாசல் பகுதிக்குச் சென்ற ஈபிஎஸ்-க்கு அங்கு குவிந்திருந்த ஏராளமான கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

top videos

    முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தனது உழைப்பையும், நேர்மையையும் அங்கீகரித்து பொதுச்செயலாளர் என்ற உயர் பொறுப்பில் கழகம் தன்னை அமர்த்தி இருப்பதாகவும், பிறப்பின் அடிப்படையில் தலைமையை தீர்மானிக்காமல் ஜனநாயக அடிப்படையில் தலைமையை தேர்ந்தெடுத்து, ஜனநாயகத்தின் மாண்புகளைக் காத்து நிற்கும் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி பெருமிதம் அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: ADMK, EPS, Salem