முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொதுச்செயலாளராக அறிவிக்கவேண்டும்- தேர்தல் ஆணையத்துக்கு இபிஎஸ் மீண்டும் மனு

பொதுச்செயலாளராக அறிவிக்கவேண்டும்- தேர்தல் ஆணையத்துக்கு இபிஎஸ் மீண்டும் மனு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் மனு அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை உடனடியாக அங்கீகரித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு அளித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு அளித்துள்ளது.

அதில், புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனுவில் கையெழுத்திடும் வகையில், பொதுச் செயலாளர் தேர்வு மற்றும் பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்களை உடனடியாக அங்கீகரித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் மீது இறுதி தீர்ப்பு வராமல், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Edappadi Palaniswami, Election commission of India