முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தேர்தல் ஆணைய அங்கீகாரத்துக்குப் பின் டெல்லி செல்லும் இபிஎஸ்- அமித்ஷாவுடன் சந்திப்பு

தேர்தல் ஆணைய அங்கீகாரத்துக்குப் பின் டெல்லி செல்லும் இபிஎஸ்- அமித்ஷாவுடன் சந்திப்பு

அமித் ஷா - ஈபிஎஸ்

அமித் ஷா - ஈபிஎஸ்

EPS Meet Amit Shah | டெல்லியில் அதிமுக அலுவலகம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில்,அதற்கான பணிகளையும் எடப்பாடி பழனிசாமி பார்வையிடவுள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 26-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர், முதல் முறையாக வரும் புதன்கிழமை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லவுள்ளார். அங்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார். நேரம் கிடைத்தால் பிரதமர் மோடியையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 12 மணி நேர வேலை மசோதா : 24-ம் தேதி தொழிற்சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு ஆலோசனை

அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருக்கிறது என நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அமித்ஷா கூறியுள்ளதால், சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இடையான வார்த்தை மோதல் குறித்தும் அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர, டெல்லியில் அதிமுக அலுவலகம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகளையும் எடப்பாடி பழனிசாமி பார்வையிடவுள்ளார்.

top videos
    First published:

    Tags: Amit Shah, EPS