முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் முதல் அறிக்கை..!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் முதல் அறிக்கை..!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத்தலைமையை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது. அதேநேரம், அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பதை உயர்நீதிமன்றம் தான் முடிவுசெய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க : கருப்பு கூலிங் க்ளாஸ்... தொப்பி... எம்.ஜி.ஆராக மாறிய எடப்பாடி பழனிசாமி

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடத் தடையில்லை எனவும் தீர்ப்பளித்தார். இதனால் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பினை முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதனும், பொள்ளாச்சி ஜெயராமனும் வெளியிட்டனர்.

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், எடப்பாடி பழனிசாமி தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களது பதிவை புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வரும் 5-ம் தேதி முதல் கட்சி தலைமை அலுவலகத்தில் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, தலா 10 ரூபாய் வீதம் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: ADMK, Edappadi Palaniswami, General Secretary