முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மக்களைப் பற்றி அக்கறை இல்லை... மதுவிற்கு தானியங்கி இயந்திரமா? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மக்களைப் பற்றி அக்கறை இல்லை... மதுவிற்கு தானியங்கி இயந்திரமா? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

மக்களைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் வருவாயை மட்டும் கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வெட்கக்கேடானது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனையை தொடங்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் வணிக வளாகங்களில் இப்படி மது விற்கப்படுவது என்ன மாதிரியான எண்ணங்களை விதைக்கும் என்ற யோசனை கூட அரசுக்கு இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் வருவாயை மட்டும் கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வெட்கக்கேடானது எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

top videos

    தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற தானியங்கி இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாக வரும் செய்திகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    First published:

    Tags: ADMK, DMK, Edappadi Palaniswami, Senthil Balaji