முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சட்டப்பேரவையில் நாங்கள் பேசுவது ஒளிபரப்பாவதில்லை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் நாங்கள் பேசுவது ஒளிபரப்பாவதில்லை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் நாங்கள் பேசுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேசக்கூடிய கருத்துக்கள், நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘திமுக தேர்தல் அறிக்கையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதாக அறிவித்திருந்தது. தற்போது 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம் பெற்றுள்ளதாக திமுக கூறியுள்ள நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது இல்லை. ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் முக்கிய எதிர்கட்சியான அதிமுக பேசும் கருத்துகள் மற்றும் திட்டங்கள் குறித்து பேசுவது நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மாறாக அமைச்சர்கள் பதில் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதனால் எந்த கட்சிகள் கேள்வி கேட்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.

உடனே குறுக்கீட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், ‘நீங்கள் கூறிய அதே குற்றச்சாட்டுகளை நாங்கள் கடந்த காலத்தில் எதிர் கட்சிகளாக இருக்கும்போது கூறியதாகவும் ஒருமுறை கூட முகத்தை காட்டவில்லை என தெரிவித்தார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆயிரம் முறை தான் பேசி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என கூறிய எடப்பாடி பழனிச்சாமியை கலாய்த்து பேசினார் துரை முருகன்.

தொடர்ந்து பேசிய சட்டபேரவை தலைவர் அப்பாவு, ‘உங்கள் கருத்தை பதிவு செய்ய கூடாது என நானோ, முதல்வரோ, சபையோ விரும்பவில்லை. தொடர்ந்து நீங்கள் கேட்கும் போதெல்லாம் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் எதிர்கட்சிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்தார்.

தொடர்ந்து பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘எதிர்க்கட்சிகள் பிரச்சனையை எழுப்பும் போது அது குறித்த பதில் அமைச்சரிடம் இருந்தால் தான் அதற்கு அமைச்சர்கள் பதில் கூறமுடியும். அவ்வாறு பதில் கருத்து அமைச்சரிடம் இல்லாவிடில் நேரலையாக எதிர்கட்சிகள் கருத்து ஒளிபரப்பப்பட்டால் ஒரு தரப்பு கருத்து மட்டுமே ஊடகத்தில் வெளிவரும். இது சரியானது அல்ல.

top videos

    எதிர்க்கட்சியில் இருக்கக் கூடிய முன்னாள் அமைச்சர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கும் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இதனை மாறி மாறி காண்பித்தால் சபையை சுமூகமாக நடத்த முடியாது. எனவே நேரலை ஒளிபரப்பு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

    First published:

    Tags: Edappadi Palaniswami