முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "இனிமே அண்ணாமலை பற்றி கேள்வி கேட்காதீங்க.." - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!

"இனிமே அண்ணாமலை பற்றி கேள்வி கேட்காதீங்க.." - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!

அண்ணாமலை -ஈபிஎஸ்

அண்ணாமலை -ஈபிஎஸ்

EPS About Annamalai | ரசியல் கட்சிகளில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும். அப்படியானவர்கள் குறித்து கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன் என ஈபிஎஸ் பேச்சு

  • Last Updated :
  • Salem, India

அண்ணாமலை அவரை முன்னிலைப்படுத்த ஏதேதோ பேசி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சேலத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியிடன் திமுகவினர் குறித்த சொத்து பட்டியல் குறித்தும், தமிழ்நாட்டில் ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டாரா? இல்லையா? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. பத்திரிகைகளில் செய்திகளைப் பார்த்தபோது, ​​அவர் சொத்துப் பட்டியலை வெளியிட்டிருப்பது தெரிகிறது. எனவே, அவர் வெளியிடட்டும் பார்க்கலாம் என்று கூறினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்து வருகிறாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,ஏன் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி பேசி பேசித்தான் அவர் பெரிய ஆளாகிறார். எனவே அவரைப் பற்றியே பேச வேண்டாம். நான் கட்சிக்கு வந்து 50 ஆண்டுகளாகிறது. எனக்கு என்ன நடக்கிறது? ஏது நடக்கிறது? என்று தெரியும்.

இதையும் படிங்க: மாபியா கும்பல் தலைவன் போலீசார் கண்முன்னே சுட்டுக் கொலை...144 தடை உத்தரவு... உ.பி.யில் பரபரப்பு!

 

அண்ணாமலை இதுபோன்ற பேட்டிகளைக் கொடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். தயவுசெய்து அவர் தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். வேறெந்த கட்சியைக் குறித்தாவது கேளுங்கள். காரணம் அரசியல் கட்சிகளில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும். அப்படியானவர்கள் குறித்து கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.

top videos

    அதைவிடுத்து தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை பேசி வருகிறார். அவர் ஏதாவது ஒன்றைப் பேசிவிடுகிறார். இதனால், அவர் குறித்த ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு எங்களைப் போன்ற தலைவர்கள் வந்துவிட்டோம். முதிர்ந்த அரசியல்வாதி கருத்து குறித்துக் கேட்டால் பதில் சொல்லலாம். எனவே, தயவுசெய்து ஊடகங்கள் என்னிடம் அவர் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

    First published:

    Tags: ADMK, Annamalai, BJP, EPS