முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம்.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம்.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என அமித் ஷா கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை என தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் பாஜக வளரவேண்டும் என்றால் தனித்து களம் காணவேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். தன் எண்ணத்தை மீறி கட்சி மேலிடம் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்துவிடுவேன் என கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தில் அவர் பேசியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நியூஸ் 18 தொலைகாட்சியின் ரைசிங் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுகவுடனான கூட்டணி தொடர்வதாக தெரிவித்தார்.

அமித் ஷாவின், ரைசிங் இந்தியா பேச்சு கடந்த 4 நான்கு நாள்களாக தமிழ்நாட்டில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என அமித் ஷா கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை என தெரிவித்தார்.

அண்ணாமலை கருத்துக்கு முரண்படும் வகையில், பேசியுள்ள மத்திய அமைச்சர் எல். முருகன், அதிமுக பாஜக கூட்டணி வலுவாக உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி தொடர்பான முடிவை பாஜக தேசியத் தலைமையே எடுக்கும். மாநிலத்தில் உள்ளவர்களும் மத்தியில் உள்ளவர்களை கேட்டே நடப்பர் என தெரிவித்தார்.

அடிக்கடி அதிமுக - பாஜக கூட்டணி பற்றி  கருத்துகளை முன்வைத்துவரும் அண்ணாமலைக்கு பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் கருத்து அமைந்துள்ளது.

top videos
    First published:

    Tags: ADMK, Amit Shah, Annamalai, BJP, Edappadi Palaniswami