முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “இதே டெல்டாக்காரர் தானே மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்...” முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்..!

“இதே டெல்டாக்காரர் தானே மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்...” முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்..!

முதலமைச்சர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

Edapadi palanisamy | இதே டெல்டாக்காரர் தானே மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது - எடப்பாடி பழனிசாமி

  • Last Updated :
  • Tamil Nadu, India

டெல்டா பகுதிகள் நிலக்கரி எடுப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசி பிரயோஜனம் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது தொடர்பாக இன்று எதிர்கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தது. இது தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,   “இந்தியா முழுவதும் 101 இடத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தோண்ட திட்டமிட்டு  தமிழ்நாட்டில் 3 இடங்களில் தோண்டுவதற்காக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே என்எல்சி சுரங்கத்தால் 105 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் டெல்டா பகுதியில் புதிதாக மூன்று சுரங்கங்கள் தோண்ட திட்டமிட்டு இருப்பது விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

ஏற்கனவே திமுக ஆட்சியில் தான் மீத்தேன் எடுப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் அதுதான் காரணம். தற்போது இந்த விவகாரத்திலும் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தால் போதாது. 38 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் குரல் எழுப்பாதது ஏன்? இது மத்திய அரசும் சம்பந்தப்பட்ட விவகாரம். எனவே சட்டமன்றத்தில் மட்டும் பேசினால் போதாது. பாராளுமன்றத்திலும் பேசி இதை ரத்து செய்ய முழு மூச்சோடு தி.மு.க. எம்பிக்கள் கடமையாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் டெல்டா காரன் இதை அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாரே என்ற செய்தியாளரின் கேள்விக்கு,   “இதே டெல்டாக்காரர் தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது” என விமர்சனம் செய்தார்.

First published:

Tags: Cm edapadi palanisami, Coal, EPS, TN Assembly