முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆருத்ரா மோசடி வழக்கு... நடிகர் ஆர்.கே.சுரேஷை விசாரிக்க போலீசார் திட்டம்..!

ஆருத்ரா மோசடி வழக்கு... நடிகர் ஆர்.கே.சுரேஷை விசாரிக்க போலீசார் திட்டம்..!

ஆர்கே சுரேஷ்

ஆர்கே சுரேஷ்

தமிழ்நாட்டையே உலுக்கிய ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரிக்க பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30,000 ரூபாய் வட்டி தருவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்ததாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மீது கடந்தாண்டு புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தமிழ்நாடு முழுவதும் கடந்தாண்டு ஜூலை மாதம் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் ஆருத்ரா நிதி நிறுவனம் 98,000 பேரிடம் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்தது.

இந்த மோசடி விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆருத்ரா நிறுவன மோசடி விவகாரம்... பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் விளக்கம்

இவ்வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் ரூஸோ என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை பணம் வாங்கி கொண்டு மோசடி வழக்கிலிருந்து தப்ப வைக்க நடிகர் ஆர்.கே சுரேஷ் முயற்சி செய்ததாக எழுந்த புகாரில் அவரிடம் விசாரிக்க பொருளாதார குற்ற பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

top videos
    First published:

    Tags: Cheating, Crime News, Scam