முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மதிமுகவின் முதன்மைச் செயலாளர் ஆகிறார் துரை வைகோ...?

மதிமுகவின் முதன்மைச் செயலாளர் ஆகிறார் துரை வைகோ...?

துரை வைகோ

துரை வைகோ

Durai vaiko | மதிமுகவின் முதன்மைச் செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜூன் 14 ஆம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு ஜூன் ஒன்றாம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மதிமுகவின் பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வைகோவுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வரும் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமிக்கு பதில், புதிய அவைத் தலைவராக கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் தேர்வு செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கக் கூடிய துரை வைகோ, மதிமுகவில் முதன்மைச் செயலாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு அதற்கு தேர்வு செய்யப்பட உள்ளார்.

' isDesktop="true" id="991412" youtubeid="PmerE9IITfI" category="tamil-nadu">

மேலும் படிக்க... கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயன் பெறுவது எப்படி? 

top videos

    மதிமுகவின் பொருளாளராக இருக்கக் கூடிய கணேசமூர்த்தி அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய பொருளாளர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    First published:

    Tags: Durai Vaiko, MDMK, Vaiko