ஒரு நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்கு 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத்தலைவர் கன்னியாகுமரி வந்தடைந்தார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், டி.ஜி.பி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து பூம்புகார் படகுத் துறைக்கு வந்த குடியரசுத் தலைவர் படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்திற்குச் சென்றார். அங்கு பேட்டரி கார் மூலம் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட அவர் திருவள்ளுவர் சிலையின் அழகையும் கண்டு ரசித்தார்.
அதன் பிறகு படகுத் துறைக்கு திரும்பிய அவர் அங்கிருந்து விவேகானந்தர் கேந்திராவுக்கு சென்றார். அங்கு பாரத மாதா கோவிலில் தரிசனம் செய்தார். இதையடுத்து தனது பயணத்தை முடித்துக் கொண்ட திரௌபதி முர்மு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanniyakumari, President Droupadi Murmu, Swami Vivekananda