முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எதிர்க்கட்சிகளை முடக்கவே வருமான வரி சோதனை... டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி..

எதிர்க்கட்சிகளை முடக்கவே வருமான வரி சோதனை... டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி..

வருமானவரித்துறை கார் கண்ணாடியை உடைத்த நபர்

வருமானவரித்துறை கார் கண்ணாடியை உடைத்த நபர்

திமுக பார்க்காத வழக்குகளே சோதனைகளே இல்லை எனவே இதனையும் திமுக திடமாக சந்திக்கும் என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வருமானவரித் துறையினர் காவல் துறையினரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் இல்லை என்றால் இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள தான் வேண்டும் என திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரரின் வீடு மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருமான வரி சோதனைகள் நடைபெறும் இடங்களில் குவிந்தனர். அப்போது, கார் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. திமுகவினர் எதிர்ப்பால் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையிட முடியாத சூழல் நிலவியது.

இந்த நிலையில் வருமானவரி சோதனை குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன்,  “இனி வரக்கூடிய நாட்களிலும் தேர்தல் நெருங்குவதால் இது போன்று வருமான வரி சோதனைகள் நடைபெறும். எதிர்க்கட்சிகளை முடக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தின் அடிப்படையில் இது போன்ற வருமானவரித்துறை சோதனைகள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறுகிறது” என்று குற்றம்சாட்டினார்.

சோதனைக்கு செல்லும் வருமானவரித் துறையினர் காவல் துறையினரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் இல்லை என்றால் இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள தான் வேண்டும் என எச்சரித்த அவர், திமுக  பார்க்காத வழக்குகளே சோதனைகளே இல்லை எனவே இதனையும் திமுக திடமாக சந்திக்கும் என தெரிவித்தார்.

top videos

    First published:

    Tags: DMK, Income Tax raid, Senthil Balaji