முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 2 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும் - சொத்துப் பட்டியல் விவகாரத்தில் அண்ணாமலைக்கு தி.மு.க நோட்டீஸ்

2 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும் - சொத்துப் பட்டியல் விவகாரத்தில் அண்ணாமலைக்கு தி.மு.க நோட்டீஸ்

அண்ணாமலை

அண்ணாமலை

இரண்டு நாளில் மன்னிப்பு கோர வேண்டும் என்று அண்ணாமலைக்கு தி.மு.க சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தி.மு.க தலைவர்கள் சொத்துப் பட்டியல் வெளியீடு தொடர்பாக அண்ணாமலைக்கு தி.மு.க சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் 27 பேரின் சொத்து பட்டியல், தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். தாம் வெளியிடும் தகவல்களை தமிழ் மக்கள் புத்தாண்டாக கொண்டாடுவார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

அதன்படி, ஏப்ரல் 14-ம் தேதி காலை 10.15 மணியளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்து பட்டியல் என்ற பெயரில் ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டார். அப்போது, அண்ணாமலை அவர் கட்டியிருக்கும் ரஃபேல் கைக் கடிகாரத்தின் பில்லையும் வெளியிட்டார். தொடர்ந்து, அ.தி.மு.க தலைவர்களின் சொத்துப் பட்டியலும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் குறித்த அறிவிப்பை தி.மு.க தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்தநிலையில், அண்ணாமலைக்கு எதிராக தி.மு.க சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘தி.மு.க நிர்வாகிக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது. முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், நிர்வாகிகளின் நற்பெயரை களங்கப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்ணாமலை செய்வது அரசியல் ‘ஸ்டண்ட்’ - துரைமுருகன் விமர்சனம்

உங்கள் ரஃபேல் கைக் கடிகாரம் பா.ஜ.கவின் சொத்தாக மாறுமா? 2 நாட்களில் மன்னிப்பு கேட்டு, வீடியோவை நீக்காவிட்டால் வழக்குத் தொடரப்படும். சமூக ஊடகங்கள் இணையதளங்களில் உள்ள வீடியோவை நீக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Annamalai, DMK