முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ''இந்தியாவை காப்பாற்ற நாம் வெற்றி பெற வேண்டும்'': முதல்வர் ஸ்டாலின்

''இந்தியாவை காப்பாற்ற நாம் வெற்றி பெற வேண்டும்'': முதல்வர் ஸ்டாலின்

முகஸ்டாலின்

முகஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை திமுக அரசு நிறைவேற்றி இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் நல்லசேதுபதி இல்லத் திருமணத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுகவில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மோசமான நிதிச் சூழல், மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாத நிலையிலும், சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை திமுக அரசு நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்த அவர், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் வாசிக்க: 12 மணி நேர வேலை மசோதா: யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் எடுப்பார் - அமைச்சர் சேகர்பாபு

top videos

    இந்தியாவை காப்பாற்ற நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் நாம் வெற்றி பெற வேண்டும் என்று கூறிய முதலமைச்சர், நாட்டை காப்பாற்ற திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    First published:

    Tags: CM MK Stalin