முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்..

கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்..

மாதிரி படம்

மாதிரி படம்

Thiruvarur Kalaignar Karunathi Kottam : திருவாரூர் அருகே காட்டூரில் கலைஞர் கோட்டத்தை ஜூன் 20ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்க இருக்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஜூன் 20ஆம் தேதி திருவாரூர் அருகே காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்.

திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் முதலமைச்சரும் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு. ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதில் வரும் ஜூன் 3ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு தொடர்ச்சியாக கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

வடசென்னையில் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி நடக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. 75ஆம் ஆண்டில் திமுக அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் மாவட்டங்கள்தோறும் கலைஞரின் முழு உருவச்சிலை மற்றும் மார்பளவு சிலைகளை அமைக்க முயற்சி மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: தமிழக பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடுக்கு ஓபிசி சான்றிதழ் கேட்பதா? ராமதாஸ் ஆவேசம்

top videos

    திருவாரூர் அருகே காட்டூரில் கலைஞர் கோட்டத்தை ஜூன் 20ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைப்பார் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. திறப்பு விழா தேதி ஜூன் 15 என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மாற்றப்பட்டுள்ளதுஎன்றென்றும் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம், பொதுக்கூட்டம் என ஆண்டு முழுவதும் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    First published:

    Tags: DMK, DMK Karunanidhi, Nithish kumar