முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் அவசர சட்டத்தை திமுக எதிர்க்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் அவசர சட்டத்தை திமுக எதிர்க்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இரு மாநில முதலமைச்சர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இரு மாநில முதலமைச்சர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் சந்தித்து பேசினர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, டெல்லி முதலமைச்சரும், ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்.

மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க கோரிக்கை விடுக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த சந்திப்பில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் சிங் மான்-உம் உடன் இருந்தார். இரு மாநில முதல்வர்களையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, மத்திய பாஜக அரசு மக்களாட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். டெல்லியில் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்ப்பதாக கூறிய அவர், அனைத்து மாநில முதலமைச்சர்களும் அச்சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

First published:

Tags: Arvind Kejriwal, CM MK Stalin, Delhi