திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளர்.
முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது அவதூறு பரப்பியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் 500 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு திமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, கோடிகளில் சொத்துகளை குவித்து வைத்திருக்கும் திமுகவினர் இருக்கும்போது, தன்னிடம் மேலும் 500 கோடி ரூபாய் வழங்கும்படி ஆர்.எஸ் பாரதி கேட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் வெளியிட்டுள்ள சட்ட அறிக்கையில், திமுகவினருக்கு சொந்தமான 3,478 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளிகளும், 34,184 கோடி ரூபாய் மதிப்பிலான கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பு பொய்யானது என்று தெரிவித்து விட்டு, அடுத்த வரியில், ஒருவர் திமுக உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும், அவருக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிறுவனங்கள், கட்சியின் சொத்தாக மாறாது என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், திமுகவினருக்கு சொந்தமான பள்ளிகளில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை, திமுக தலைமையகமான அறிவாலயத்தில் ஒப்படைக்கிறார்கள் என்று தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களையும் சிபிஐயிடம் அளிக்க உள்ளதாகவும், தங்கள் கட்சியின் தலைவருக்கும், இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை, ஆர்.எஸ்.பாரதி பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read: பென்னி குயிக் சிலை - சட்டப்பேரவையில் ஈபிஎஸ் கவனஈர்ப்பு தீர்மானம்
மேலும், ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் தான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை சுமத்தியதற்காக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கோருவதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில், தன் மீதும் தனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, DMK, Tamil News