சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணியின் 14 வது செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், ‘மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுக கூறிவிட்டு தற்போது படிப்படியாக மதுவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. விமான நிலையங்கள் பேருந்து நிலையங்கள் என பொது இடங்களில் மது விற்பனையை திமுக அரசு துவங்கி உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து உள்ளது. மது, கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் எந்த நிலையிலும் கிடைக்கக்கூடிய நிலை உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசாங்கத்தின் பணி. அனைத்து தரப்பு மக்களும் இதனால் அடையும் பாதிப்பு குறித்து அரசு உணர வேண்டும்.
இதையும் படிக்க : துரை வைகோவுக்கு பதில் கூறமுடியாது... மதிமுக துரைசாமி காட்டம்
மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் சரிவர செயல்படுத்துவதில்லை. போக்குவரத்துத்துறை குழப்பம், பால் தட்டுப்பாடு, மின் கட்டண உயர்வு, ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு, சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் மக்களுக்கு பயன் தரவில்லை. தமிழகத்தில் திமுகவின் மக்கள் விரோத போக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கலைஞர் கருணாநிதி நினைவுச் சின்னமான பேனாவை கடலில் வைப்பதற்கு மத்திய அரசு கொடுத்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும் என எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்தார்.
மேலும் தூத்துக்குடியில் விஏஓ கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய அவர், தமிழக அரசு தான் மணல் கொள்ளையை ஆதரிக்கிறது. அரசு அதிகாரிகளுக்கு இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை? என வினவினார்.
மேலும் ஓரிரு நாட்கள் கர்நாடகத் தேர்தலில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தேர்தல் பிரசரம் மேற்கொள்ள உள்ளேன். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்த மறுப்பை எந்த தரப்பு மக்களும் ஏற்கவில்லை. ஆனால் உண்மை நிலையை குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதற்குரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். பாஜக, தமாக, அதிமுக மற்றும் ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை பெறுவோம் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.