முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுகவினரின் சொத்துப் பட்டியல் வெளியிடும் நேரம்... அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!

திமுகவினரின் சொத்துப் பட்டியல் வெளியிடும் நேரம்... அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!

அண்ணாமலை

அண்ணாமலை

திமுக பைல்ஸ் என்கிற தலைப்போடு அண்ணாமலை ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாளை காலை திமுக.வினரின் சொத்து பட்டியலை வெளியிடப்போவதாக பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் 27 பேரின் சொத்து பட்டியல், தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று கூறினார்.தாம் வெளியிடும் தகவல்களை தமிழ் மக்கள் புத்தாண்டாக கொண்டாடுவார்கள் என்றும் அண்ணாமலை கூறி இருந்தார்.

இதையும் வாசிக்க: உதயநிதி வளர வேண்டிய அமைச்சர்...” - சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக..!

இதன்படி ஏப்ரல் 14ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு திமுக.வினரின் சொத்து பட்டியலை வெளியிடப்போவதை, திமுக பைல்ஸ் என்கிற தலைப்போடு அண்ணாமலை ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

top videos

    இந்த வீடியோ அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    First published:

    Tags: Annamalai, DMK