முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திண்டுக்கல் லியோனிக்கு அபராதம் விதித்த போலீஸ்... காரணம் இதுதான்..!

திண்டுக்கல் லியோனிக்கு அபராதம் விதித்த போலீஸ்... காரணம் இதுதான்..!

திண்டுகல் லியோனி

திண்டுகல் லியோனி

தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை ரூ.2,500 அபராதம் விதித்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் நபர்களை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நேரடியாக வாகன தணிக்கை மூலம் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அத்தோடு, இணையத்தில் சமூக வலைதளங்கள் வாயிலாக தரப்படும் புகார்கள் மீது போக்குவரத்து காவல்துறை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் சமூக வலைத்தள பக்கத்தில் ஒருவர், இத்தகைய புகாரை எழுப்பியிருந்தார்.

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு அரசு இலச்சினை பொருத்தி இருந்த வெள்ளை நிற காரில் கருப்பு ஸ்டிக்கர் அடர்த்தியாக ஒட்டப்படிருந்தது. மேலும், அதில் பம்பர் பொருத்தப்பட்டதுடன், நம்பர் பிளேட்டும் சரியாக இல்லை என்று புகாரில் அவர் கூறியிருந்தார்.

அந்த புகாரை கவனத்தில் கொண்ட போக்குவரத்து காவல்துறை தகவல் உண்மை தான என சிசிடிவி காட்சிகளை கொண்டு உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த கார் தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவர் திண்டுகல் லியோனிக்கு சொந்தமானது எனவும், அரசு பதவியில் இருப்பவர் என்பதால், தமிழ்நாடு இலச்சினையை அவர் சொந்த காரில் பொருத்தியதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: அரசு பேருந்துகளில் 5 வயது வரை கட்டணம் ரத்து... அரசாணை வெளியிட்ட தமிழக அரசு... முழு விவரம்...!

top videos

    இதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றபடி, கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதற்காக ரூ.500, நம்பர் பிளேட் முறையாக இல்லாததால் ரூ.1,500 மற்றும் பம்பர் பொருத்தியதற்காக ரூ.500 என மொத்தம் ரூ.2,500 அபராதத்தை போக்குவரத்து காவல்துறை விதித்துள்ளது. இதற்கான ரசீதை புகார் அளித்தவருக்கு சமூக வலைத்தள வாயிலாக போக்குவரத்து காவல்துறை பகிர்ந்துள்ளது.

    First published:

    Tags: I leoni, Traffic Rules