முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக பொதுச் செயலாளர் பதவி.. எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது

அதிமுக பொதுச் செயலாளர் பதவி.. எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

Supreme Court : அதிமுக பொதுச் செயலாளர் பதவியை அங்கீகரிக்கக்கோரி, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட திருத்தப்பட்ட அதிமுக சட்டவிதிகளை அங்கீகரிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பிரதிபா சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரிக்க ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

அதே சமயம் கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வகையில், மாற்றங்களை அங்கீகரிக்குமாறு ஈபிஎஸ் தரப்பு வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில் பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்று தேர்தல் ஆணைய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சட்டப்பேரவையின் கதவுகள் மூடி ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: காரணம் என்ன தெரியுமா?

இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணையின்போது மனுதாரர் ஒருவருக்கு ஆதரவாக தனது கணவரும், வழக்கறிஞருமான மணீந்தர் சிங் ஆஜராகியுள்ளதால் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி பிரதிபா சிங் கூறினார். மேலும் மற்றொரு அமர்வு விசாரிக்கும் வகையில் தலைமை நீதிபதி பார்வைக்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.

top videos
    First published:

    Tags: ADMK, OPS - EPS, Supreme court, Tamilnadu