முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 2பேர் கொரோனாவால் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 2பேர் கொரோனாவால் உயிரிழப்பு

கொரோனா

கொரோனா

Corona Virus : தமிழகத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 200ஐ நெருங்கியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் இருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கி, உலகம் முழுவதையும் 2 ஆண்டுகள் புரட்டிப் போட்ட கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.குறிப்பாக தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கொரோனாவால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 198 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் இருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 54 வயதான நபர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதே போன்று, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த 82 வயது முதியவரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மனைவி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

top videos

    இந்நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் காரணமாக அதிதீவிர சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.தமிழ்நாட்டு மக்களுக்கு 90 விழுக்காடு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதிப்பு வருமா வராதா என்று பீதியை கிளப்ப வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

    First published:

    Tags: Corona, Corona death, Corona positive, Corona spread, CoronaVirus, Covid-19