முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தீவிர புயலாக வலுவடைந்தது மோக்கா... 175 கி.மீ வேகத்தில் காற்று வீசும்... வானிலை அலெர்ட்..!

தீவிர புயலாக வலுவடைந்தது மோக்கா... 175 கி.மீ வேகத்தில் காற்று வீசும்... வானிலை அலெர்ட்..!

மோச்சா புயல்

மோச்சா புயல்

இது நாளை மத்திய வங்க கடலில் இருந்து படிப்படியாக கடுமையான தீவிர புயலாக மாறி வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது

  • Last Updated :
  • Chennai, India

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் இன்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது. இது போர்ட் பிளேருக்கு மேற்கே 520 கிமீ தொலைவிலும், காக்ஸ் பஜாரின் தென்மேற்கில் 1,100 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது.

இது நாளை மத்திய வங்க கடலில் இருந்து படிப்படியாக கடுமையான தீவிர புயலாக மாறி வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதன் பின் 14 ஆம் தேதி காக்ஸ் பஜார், தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளில் கடக்க வாய்ப்புள்ளது.

top videos

    கரையை கடக்கும் போது கடுமையான புயலாகவும் காற்றின் வேகம் 150-160 கிலோமீட்டர் முதல் 175 கிலோமீட்டர் வேகத்தில் கூட வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Cyclone, Heavy rain