முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உஷார் மக்களே... அடுத்த 4 நாட்களில் வெயில் இன்னும் சுட்டெரிக்கும்..

உஷார் மக்களே... அடுத்த 4 நாட்களில் வெயில் இன்னும் சுட்டெரிக்கும்..

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம்

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கக்கடல் பகுதிகளில் உருவாகிய அதி தீவிர “மோக்கா” புயல் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம், வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வேலூரில் 41.66 டிகிரி செல்சியஸும், சென்னையில் 40.5 டிகிரி செல்சியஸும்,கரூர் பரமத்தி பகுதியில் 40 டிகிரி செல்சியஸும்,  ஈரோட்டில் 39.4444 டிகிரி வெப்பநிலையும் இருந்தது.

சென்னையைப் பொறுத்த வரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பாதிப்பு உள்ளவர்களுக்கு வெப்ப அழுத்தம் காரணமாக சோர்வு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அவசரக்கால சிகிச்சை முறைகள்: 

வெப்பத்தாக்கத்தால் பாதிக்கப்படின் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வசதிக்கு அழைக்கவும். மேலும், உதவி வரும் வரை பின்வரும் முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

பாதிக்கப்பட்டவரை சமமான இடத்தில் தரையில் படுக்க வைக்கவும்.

அவரது உடல் வெப்ப நிலையை பரிசோதித்து, முடியும் பட்சத்தில் நிழலான / குளிர்ச்சியான இடத்திற்கு கொண்டு செல்லவும்.

குளிர்ச்சியான பொருட்களை அவர் மீது படும்படி வைத்து ஒத்தடம் தரவும். இதன் மூலம் அவரது உடல் வெப்ப நிலையை குறைக்க இயலும்.

இதையும் வாசிக்கபவுலிங்கில் மிரட்டிய ஆர்.சி.பி… 112 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் படுதோல்வி…

top videos

    குளிர்ச்சியான நீரை அவர் மீது தெளித்தும், ஈரமான துணியால் சுற்றியும், மின்விசிறியின் கீழ் அவரை கிடத்தியும் அவரது உடல் வெப்ப நிலையை குறைக்க இயலும்.

    First published:

    Tags: Weather News in Tamil