முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாணவர்களின் தகவல்கள் திருட்டு... பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரணை?

மாணவர்களின் தகவல்கள் திருட்டு... பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரணை?

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு சைபர் கிரைம் சம்மன்

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு சைபர் கிரைம் சம்மன்

மாணவர்களின் தகவல் திருடப்பட்ட நிலையில், சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பள்ளி மாணவர்களின் தனித் தகவல்கள் திருடப்பட்ட புகார் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலருக்குச் சம்மன் அளித்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை அலுவலக இணையதளத்திலிருந்து பள்ளி மாணவர்களின் தகவல்கள் அண்மையில் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான பிரத்யேக செய்தியை நியூஸ் 18 வெளியிட்டது.

இதையடுத்து மோசடி தொடர்பாகத் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் திருட்டு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட திட்ட அலுவலராக உள்ள புண்ணியகோடிக்கு சம்மன் அனுப்பியுள்ள போலீசார் விசாரணை செய்தனர்.

பள்ளி மாணவர்களின் தகவல்கள் வெளியே கசிந்தது எப்படி? இணையதளம் பாதுகாப்பு இல்லாமல் இயங்கியது எப்படி? போன்ற கோணங்களில் புண்ணியகோடியிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Also Read : தமிழ்நாட்டில் 5 நாட்கள் வெயிலுக்கு லீவு... மழைக்கு வந்தது வேலை... வானிலை அலெர்ட்..!

top videos

    இதுவரை பள்ளி மாணவர்கள் தகவல் திருட்டு தொடர்பாக 15-கும் மேற்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித் துறையில் உள்ள அதிகாரிகள் சிலருக்குச் சம்மன் அளித்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    First published:

    Tags: Cyber crime, Department of School Education, Students