முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கைதிகளின் பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி பணியிடை நீக்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

கைதிகளின் பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி பணியிடை நீக்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

காவல்நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களில் சமரசம் கிடையாது - மு.க.ஸ்டாலின்

  • Last Updated :
  • Chennai, India

கைதிகளின் பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விசாரணைக் கைதிகளின் பல்லைப் பிடிங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பல்பீர் சிங் தொடர்பாக எதிர்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதுகுறித்து பேசிய அம்பாசமுத்திடம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கி கொடுமைப்படுத்தியுள்ளார் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் எனக் கூறினார்.

அம்பாசமுத்திரம் விவகாரம் தொடர்பாக பேரவையில் பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ அம்பாசமுத்திரம் விவகாரத்தில் முழுமையான அறிக்கை கிடைத்தவுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஏ.எஸ்.பி பல்பீர் சிங் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல்நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களில் சமரசம் கிடையாது.

இந்த ஆட்சியில், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்றார்.

First published:

Tags: MK Stalin, Tamil News, TN Assembly