முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் மெல்ல உயரும் கொரோனா தொற்று… ஒரே நாளில் 73 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் மெல்ல உயரும் கொரோனா தொற்று… ஒரே நாளில் 73 பேருக்கு பாதிப்பு

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

கொரோனா காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 526 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்டிருந்த சுகாதாரத் துறையின் தகவலின்படி 64 பேருக்கு தொற்று உறுதி  செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட சுகாதாரத்துறையின் அறிக்கையில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதை காண முடிகிறது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்காக 363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 68 பேருக்கு தொற்று தமிழகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரத்திலிருந்து வந்த 2 பேர், குவைத்திலிருந்து வந்த 2 பேர் மற்றும் தாய்லாந்திலிருந்து வந்த ஒருவர் என வெளிநாட்டிலிருந்து வந்த 5 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதியாகியுள்ளது.  அந்த வகையில் 73 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 39 பேர் ஆண்கள், 34 பேர் பெண்கள்.

இந்த எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,95,601 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 526 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona, Covid-19