முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சி.ஏ.பி.எஃப் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும்- மத்திய அரசு அறிவிப்பு

சி.ஏ.பி.எஃப் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும்- மத்திய அரசு அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

CAPF Exam In Tamil | இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என நடைமுறைக்கு வரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சி.ஆர்.பி.எஃப் உள்ளிட்ட மத்திய ஆயுத காவல் படைகளில் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட சி.ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் தேர்வுக்கான அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், மத்திய ஆயுத காவல் படைகளுக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தியை தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் எனவும், இது வரலாற்று சிறப்புமிக்க மாற்றம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என நடைமுறைக்கு வரும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும், அனைத்து மாநில இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முடிவெடுத்துள்ளதாகவும், நாடு முழுவதும் பல லட்சம் பேர் எழுதும் இந்த தேர்வை பல மொழிகளில் நடத்துவதால், அனைத்து மாநில இளைஞர்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CAPF எனப்படும் மத்திய ஆயுத காவல் படையின் கீழ் CRPF, எல்லை பாதுகாப்புப்படை, மத்திய தொழில் பாதுகாப்புப்படை, தேசிய பாதுகாப்புப்படை, இந்தோ-திபத்தியன் எல்லை பாதுகாப்புப்படை உள்ளிட்ட அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த படைகளில் கான்ஸ்டபிள் பணியில் சேர்வதற்கான தேர்வுகளில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், கான்ஸ்டபிள் பிரிவில் பொது காவல் பணியில் ஈடுபடுவோருக்கான தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதால், கான்ஸ்டபிள் பிரிவில் டெக்னிக்கல் உள்ளிட்ட மற்ற பிரிவுகளுக்கான தேர்வின் நிலை என்ன என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: CRBF, Tamil language, Tamilnadu