முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வருகை..!

சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வருகை..!

காங்கிரஸ் எம்.எல்.ஏ

காங்கிரஸ் எம்.எல்.ஏ

தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர்

  • Last Updated :
  • Chennai, India

தமிழக சட்டப்பேரவை இரண்டு நாள் விடுமுறைக்கு பின் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது .

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி காலை தொடங்கியது. மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையும் 21-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மீதான மூன்றாம் நாள் விவாதம் வினாக்கள்- விடை நேரத்துடன் இன்று தொடங்குகிறது.

top videos

    கடந்த வெள்ளிக்கிழமை அவதூறு வழக்கு ஒன்றில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர். Stand with Rahul என்ற பதாகையை ஏந்தி சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க வந்தனர். ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து இன்று இரவு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    First published:

    Tags: Congress, Rahul Gandhi, TN Assembly