முகப்பு /செய்தி /தமிழ்நாடு / டாஸ்மாக் விற்பனை நேரத்தை 1 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் - காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கை

டாஸ்மாக் விற்பனை நேரத்தை 1 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் - காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கை

டாஸ்மாக்

டாஸ்மாக்

டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருகிறது என காங்கிரஸ் உறுப்பினர் ஹசன் மெளலானா தெரிவித்தார்.

  • Last Updated :
  • Chennai, India

டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் எரிசக்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தவிர்க்க டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

top videos

    டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும், ஒரு மணி நேரம் நீட்டித்தால் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவது தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுத்தார்.

    First published:

    Tags: Congress, Tamil News, Tasmac, TN Assembly