முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோவையில் ஒரே வாரத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலி

கோவையில் ஒரே வாரத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலி

மாதிரி படம்

மாதிரி படம்

Tamilnadu corona | கோவை அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த வாரத்தில் 100-க்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது, 300-க்கைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்லமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இம்மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க:உங்கள் அன்புக்கு நான் நன்றியுள்ளவன்... சென்னை பயணம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி

அதேபோல கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையத்தை சேர்ந்த 60 வயது பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த வகையில் கோவை அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

First published:

Tags: Corona, Tamilnadu