முகப்பு /செய்தி /தமிழ்நாடு / துபாய் தீ விபத்தில் பலியான தமிழர்கள்... ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

துபாய் தீ விபத்தில் பலியான தமிழர்கள்... ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

CM MKStalin | இந்திய தூதரகத்தின் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

துபாயில் அல் ராஸ் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது தளத்தில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த இமாம் காசிம், முகமது ரபீக், கேரளாவை சேர்ந்த தம்பதி உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், துபாயில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பென்னி குயிக் சிலை - சட்டப்பேரவையில் ஈபிஎஸ் கவனஈர்ப்பு தீர்மானம்

top videos

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தூதரகத்தின் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: CM MK Stalin