முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விஸ்கோஸ் இழைகளுக்கு தரக் கட்டுப்பாடு.... விலக்கு அளிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விஸ்கோஸ் இழைகளுக்கு தரக் கட்டுப்பாடு.... விலக்கு அளிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்குத் தரக் கட்டுப்பாட்டு ஆணைகளிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், விஸ்கோஸ் இழை மற்றும் செயற்கை இழை பஞ்சுகளுக்குத் தரக்கட்டுப்பாடு ஆணைகள் மூலம் கட்டாயச் சான்றிதழ் பெறும் நடைமுறையால், ஜவுளித் தொழில் பாதிக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தரக்கட்டுப்பாட்டு ஆணைகளை நடைமுறைப்படுத்த ஒரு மாதமே கால அவகாசம் அளிக்கப்பட்டு, பின்னர் 2 மாதமாக நீட்டித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு, மூலப் பொருள் கொள்முதல் செய்ய ஆர்டர் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆணை பெரும் தடையை ஏற்படுத்தும் என முதல்வர் கூறியுள்ளார்.

Also Read : இடி, மின்னலுடன் வெளுத்துவாங்கப்போகும் கனமழை : 9 மாவட்டங்களுக்கு அலெர்ட் கொடுத்த வானிலை மையம்!

விஸ்கோஸ் மற்றும் பாலிஸ்டர் இழைகளுக்குத் தரக் கட்டுப்பாட்டு ஆணை பொருந்தாது எனவும், தரக் கட்டுப்பாடு ஆணைகளை அமல்படுத்துவது ‘மேக் இன் இந்தியா’ முன்னெடுப்புக்கு உதவியாக இருந்தாலும், போதிய அவகாசம் வழங்கி ஜவுளித் தொழிலின் உரிமைகளும் பாதுகாப்பப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவற்றிலிருந்து விலக்களிக்க ஏதுவாக, ரசாயனம் மற்றும் உரத்துறைக்கு உத்தரவிடக் கோரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

top videos
    First published:

    Tags: CM MK Stalin, Piyush Goyal