முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழில் சி.ஏ.பி.எஃப் தேர்வு: மத்திய அரசு முடிவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

தமிழில் சி.ஏ.பி.எஃப் தேர்வு: மத்திய அரசு முடிவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

CM MK Stalin | CAPF தேர்வுகள் 13 மொழிகளில் நடத்தப்படும் என்ற அறிவிப்பை முழு மனதுடன் வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சி.ஆர்.பி.எஃப் உள்ளிட்ட மத்திய ஆயுத காவல் படைகளில் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட சி.ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், மத்திய ஆயுத காவல் படைகளுக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தியை தவிர.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் எனவும், இது வரலாற்று சிறப்புமிக்க மாற்றம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், CAPF தேர்வுகள் 13 மொழிகளில் நடத்தப்படும் என்ற அறிவிப்பை முழு மனதுடன் வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தான் கடிதம் எழுதியதன் விளைவாக அனைத்து மாநில மொழிகளிலும் தேர்வை நடத்த வேண்டு என மத்திய அரசு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதே போல, மத்திய அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தோனிக்கு அடுத்து சி.எஸ்.கே. கேப்டன் யார்?’ – கேதர் ஜாதவ் விளக்கம்

top videos

    CAPF தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு, மொழிச் சமத்துவத்துக்கும், இந்தி ஆதிக்க எதிர்ப்பிற்கும் கிடைத்த வெற்றி என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், CRPF தேர்வுகளை தமிழில் எப்பொழுதும் நடத்தியதில்லை என 2 நாள்களுக்கு முன்னர் கூறியவர்கள், தற்போது தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: CM MK Stalin, CRBF