முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்திற்கும், ஜப்பானிற்குமான தொடர்பு பல நூற்றாண்டுகள் பழமையானது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்திற்கும், ஜப்பானிற்குமான தொடர்பு பல நூற்றாண்டுகள் பழமையானது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜப்பானில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜப்பானில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜப்பான் வாழ் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இரண்டாம் உலகப் போரில் வீழ்ந்த போதும், அதே வேகத்தில் எழுச்சி பெற்ற நாடு ஜப்பான் என பெருமிதம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஜப்பான் என்றாலே அந்த நாட்டு மக்களின் உழைப்பும், சுறுசுறுப்பும் தான் நினைவுக்கு வரும் எனக் குறிப்பிட்டார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக சிங்கப்பூரை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்றுள்ளார். ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவிற்கு புல்லட் ரயிலில் பயணம் செய்தார். இதுதொடர்பான புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்ட முதலமைச்சர், வேகத்திலும், தரத்திலும் புல்லட் ரயிலுக்கு இணையான ரயில் சேவை இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் எனவும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும் எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

புல்லட் ரயிலில் டோக்கியோ சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஜப்பான் வாழ் தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பட்டு வேட்டி, பட்டு சட்டை மற்றும் துண்டு அணிந்து கலந்து கொண்ட முதலமைச்சர், கரகாட்டம், பறையடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர், முதலமைச்சர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

 பின்னர் ஜப்பான் வாழ் தமிழர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டாம் உலகப் போரில் வீழ்ந்த வேகத்தில் எழுச்சி பெற்ற ஜப்பான், உழைப்பாளர்களின் நாடு என்று புகழ்ந்தார். தமிழர்கள் ஜப்பான் மொழியை படிப்பதில் ஆர்வம் காட்டுவது போல், ஜப்பானியர்கள் தமிழை கற்க முயற்சிப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கும், ஜப்பானிற்குமான தொடர்பு பல நூற்றாண்டுகள் பழமையானது என்றும், ஜப்பான் தமிழர்களின் அன்பான வரவேற்பை என்றும் மறக்க மாட்டேன் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

First published:

Tags: CM MK Stalin, Japan