முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு இடஒதுக்கீடு- முதலமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு..

கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு இடஒதுக்கீடு- முதலமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு..

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

முதலமைச்சரின் தனித் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தனி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது.

கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமெனத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு இதர கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதனை எதிர்த்து பாஜக கட்சியினர் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.

Also Read : கிறிஸ்துவ ஆதிதிராவிடர்களுக்கு எஸ்.சி பிரிவு உரிமைகள் வேண்டும்... சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ”தமிழக அரசு முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்திருப்பதாக” தெரிவித்தார். எனவே தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்திருப்பதாகக் கூறினார்.

top videos
    First published:

    Tags: BJP, CM MK Stalin, TN Assembly, Vanathi srinivasan