முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காவலர்களுக்கு சீருடைப் படி ரூ.4,500 ஆக உயர்வு... வார விடுமுறை... முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

காவலர்களுக்கு சீருடைப் படி ரூ.4,500 ஆக உயர்வு... வார விடுமுறை... முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிறப்புக் காவல் அணிகளில் பணியாற்றும் காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்த முதலமைச்சர், துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, காவலர்களுக்கு சீருடைப் படியாக ஆண்டுதோறும் 4,500 ரூபாய் வழங்கப்படும், மற்ற காவல் பிரிவுகளைப் போன்றே, சிறப்புக் காவல் அணிகளில் பணியாற்றும் காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து, காவலர் முதல் தலைமைக் காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் வரை பணியாற்றுவோருக்கு எரிபொருள் படி உயர்த்தி வழங்கப்படும் என கூறினார். இதே போன்று, காவலர் அங்காடி மற்றும் காவலர் மருத்துவமனை வசதிகள் ஊர்காவல் படையினருக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Also Read : "சிறுவாணியில் தடுப்பணை ஆய்வு செய்து நடவடிக்கை" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

மேலும், காவலர்களின் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி உதவித்தொகை ரூ.30,000-மாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். சென்னையில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 2,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனவும், சென்னை பெருநகரில் வானகரம், தாம்பரம் ஆணையரக பகுதியில் மேடவாக்கம், ஆவடி ஆணையரக பகுதியில் புதூர் ஆகிய 3 புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.

மேலும், தீயணைப்புத்துறையில் திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மண்டலம் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

top videos
    First published:

    Tags: CM MK Stalin, Tamilnadu police, TN Assembly