முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை நவீன தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. கடந்த ஆண்டு டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கும், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி துறைக்கும் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக 762 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இங்கு மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ், மின்சார வாகனங்களுக்கான மெக்கானிக், வெல்டிங் போன்ற நவீன திறன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து தொழில் பயிற்சி நிலையங்களும், தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் உள்ளதாகவும், தொழிற்துறையில் மட்டுமின்றி ஆட்டோ மொபைல், பொறியியல், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அரசு தொழிற்பயிற்சி மையங்களின் திறப்பு அரசின் சாதனைகளில் மேலும் ஒரு மைல்கல் என தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, TATA