முகப்பு /செய்தி /தமிழ்நாடு / டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... குடியரசுத் தலைவருடன் சந்திப்பு..!

டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... குடியரசுத் தலைவருடன் சந்திப்பு..!

மாதிரி படம்

மாதிரி படம்

CM Stalin Delhi Visit | விமானம் மூலம் நாளை இரவு டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் கள  ஆய்வு மேற்கொள்கிறார். இதனையடுத்து விழுப்புரத்திலேயே இரவு தங்கும் முதலமைச்சர் நாளை மாவட்ட அரசுத் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். அதில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.

இதையும் படிங்க: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு... சசிகலாவை விசாரிக்க சிபிசிஐடி திட்டம்..!

 

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.  வரும் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜூன் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள திருவாரூர் கலைஞர் கோட்டம், சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.

திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அங்கிருந்து காணொலி காட்சி வாயிலாக கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார் என கூறப்படுகிறது

top videos
    First published:

    Tags: CM MK Stalin, President Droupadi Murmu