முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருந்த விமான இன்ஜினில் கோளாறு: டெல்லி பயணம் ஒத்திவைப்பு

மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருந்த விமான இன்ஜினில் கோளாறு: டெல்லி பயணம் ஒத்திவைப்பு

முதல்வர் டெல்லி பயணம்

முதல்வர் டெல்லி பயணம்

அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் திடீரென விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு காரணமாக பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லி செல்ல இருந்தார்.  இந்தநிலையில் சரியாக 8: 20 மணிக்கு ஆறாம் நம்பர் கேட்டிற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல தயாராக இருந்தார்.

அப்போது, ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து 317 பயணிகளுடன் டெல்லி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்க"கலைஞர் நூற்றாண்டு நூலகம்" அரசாணை வெளியீடு

அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள், திடீரென விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் டெல்லி செல்ல முடியாமல் பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினார் மு.க.ஸ்டாலின். அதனையடுத்து, நாளை காலை மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வார் என்று தெரிகிறது.

top videos
    First published:

    Tags: CM MK Stalin